ஒரே தாக்குதலில் ஈரானின் கோமெனி, இராணுவத் தலைமைத் தளபதி, இஸ்லாமிய புரட்சிப் படைப் பிரிவு தலைமைத் தளபதி, இராணுவ அமைச்சர், இன்னொரு உயர்மட்ட தளபதி ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரமாகவே ஈரான் மீது அமெரிக்க இஸ்ரேல் கூட்டு எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் என்று பேசப் பட்டு வந்தது.
ஈரானின் பாதுகாப்பு படைகள், தலைவர்கள் முழு விழிப்புணர்வுடன், தாக்குதலை எதிர்பார்த்து காத்திருந்த போதே இது நடந்துள்ளது. மிக மிக துல்லியமான உளவுத் தகவல்கள் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளன.
ஈரானின் விமான எதிர்ப்பு அமைப்புகள் கடந்த பனிரெண்டு நாள் போரைப் போலவே இந்த முறையும் செயல்படவில்லை. ஷ்யா தனது புகழ் பெற்ற s 400 விமான எதிர்ப்பு அமைப்புகளை ஈரானுக்கு கொடுக்கவில்லை. கொடுத்திருந்த s 300 அமைப்புகள் 12 நாள் போரில் தகர்க்கப் பட்டு விட்டன. தோளில் தாங்கி சுடும்
விமான எதிர்ப்பு ஏவுகணைகளை 2027 இல் கொடுப்பதாக இருந்ததாம். சீனா வுடன் கப்பல்களை தகர்க்கும் ஏவுகணைகள் வாங்க பேச்சு நடந்து வந்ததாம்.
அதாவது சீனா, ரஷ்யா நாடுகள் கொஞ்சம் ஆயுதம் விற்று பணம் சுருட்டியதை தவிர ஈரானுக்கு ஒன்றுமே செய்யவில்லை. அந்த ஆயுதங்களால் அமெரிக்க விமான, கடற்படைக்கு எதிராக ஒன்றுமே செய்ய முடியாது. ஈரானின் பலவீனத்தை தெரிந்து கொண்டே இந்தத் தாக்குதல் நடந்து இருக்கிறது.
ரஷ்யா வரும், சீனா வரும், இந்த நாடுகளின் போர்க் கப்பல்கள் வந்து விட்டன, சீனாவில் இருந்து டன் டன்னாக ஆயுதங்கள் ராட்சச விமானங்களில் வந்து இறங்குகின்றன, புடின் விட்டுக் கொடுக்க மாட்டார், ஜின் பிங்க் போருக்கு தயாராகி விட்டார் என்பதெல்லாம் நமது விருப்பங்களே தவிர நடைமுறை சாத்தியம் இல்லை என்றே இராணுவ நிபுணர்கள் கூறி வந்தனர். இப்போது அதுவே நடக்கிறது.
அமெரிக்கா நிச்சயம் தரைவழி தாக்குதல் நடத்தப் போவதில்லை என்கிறார்கள். ஈரானிய ஏவுகணைகளால் ஓரளவு சேதம் ஏற்படும் என்பதையும் அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள்.
ஈரானை பொறுத்தவரை ஏவுகணைத் தாக்குதல் மூலம் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு அதிக சேதம் ஏற்படுத்துவது, சில நூறு அமெரிக்கர்களை கொல்வது, ஒரு அமெரிக்க போர்க் கப்பலையாவது முழுகடிப்பது அமெரிக்காவில் போருக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தும் என்று கருதுகிறது என்று the times of Israel கூறுகிறது.
ஒரு தேசம் நாசமாவதைத்தடுக்க முடியும் என்று தோன்றவில்லை.
இரா. முருகவேல்
Leave a Reply
Cancel Replyதொடர்புடைய செய்திகள்
தேர்தல் களம்
2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்கள் எந்த இரண்டு தொகுதிகளில் நடைபெறுகின்றன?