விராட் கோலிக்கு எதிராக பேச பணம்? ஜெர்மன் மாடல் லிஸ்லாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
விராட் கோலி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் மற்றும் உலக அளவில் புகழ்பெற்ற ஐகான் ஆவார். அவரது ஒவ்வொரு செயலும், குறிப்பாக சமூக வலைதளப் பதிவுகளும் ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படும். அப்படிப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன் ஜெர்மன்-தென்னாப்பிரிக்க மாடல் மற்றும் இன்ஃப்ளூயன்சரான லிஸ்லாஸ் (LizLaz) என்பவரின் இன்ஸ்டாகிராம் பதிவை விராட் கோலி தவறுதலாக 'லைக்' செய்ததாக ஒரு பெரிய சர்ச்சை வெடித்தது.
ஃபிலிம்மந்த்ரா (Filmymantra) ஊடகத்திற்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், விராட் கோலிக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும், அவரைப் பற்றி தவறாகப் பேசவும் சில பத்திரிகையாளர்கள் தமக்கு பணம் கொடுக்க முன்வந்ததாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் 'லைக்' விவகாரம்: தொடங்கியது எப்படி?
சில மாதங்களுக்கு முன்பு, புகைப்படக் கலைஞர் அத்வைத் வைத்யாவுடன் லிஸ்லாஸ் இருக்கும் ஒரு பழைய இன்ஸ்டாகிராம் பதிவை விராட் கோலியின் அதிகாரப்பூர்வ கணக்கு லைக் செய்தது.
கடந்த 2025 ஆம் ஆண்டு நடிகை அவ்னீத் கவுர் விவகாரத்தில் 'இன்ஸ்டாகிராம் அல்காரிதம்' காரணமாக லைக் விழுந்ததாகக் கூறப்பட்டது போல, இந்த முறையும் இன்ஸ்டாகிராம் அல்காரிதம் மீதே ரசிகர்கள் கிண்டலாக பழியைப் போட்டனர்.
லிஸ்லாஸின் அதிரடி குற்றச்சாட்டு: "பொய் சொல்ல பணம் கொடுத்தார்கள்"
இந்த சர்ச்சை முடிவுக்கு வந்த நிலையில், லிஸ்லாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"இந்த சம்பவம் பெரிய அளவில் வைரலான பிறகு, பல ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் என்னைத் தொடர்பு கொண்டனர். சில பத்திரிகையாளர்கள் என்னை வற்புறுத்தி, நான் சொல்ல விரும்பாத விஷயங்களைச் சொல்லுமாறு கட்டாயப்படுத்தினர். குறிப்பாக, விராட் கோலிக்கு எதிராக தவறாகப் பேசவும், அவர் செய்யாத சில விஷயங்களைச் செய்தார் என்று பொய்யாகக் குற்றம் சாட்டவும் எனக்குப் பணம் தருவதாகக் கூறினார்கள்.
எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி
தமக்கு வந்த அந்த மோசமான சலுகைகளை தான் உடனடியாக நிராகரித்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
தான் ஒரு டிராவல் வ்லாகர் (Travel Vlogger) என்பதால் இந்திய கலாச்சாரம் சார்ந்த பல வீடியோக்களைப் பதிவிடுவதாகவும், தானும் ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து பார்ப்பவர் (குறிப்பாக RCB அணியின் தீவிர ஆதரவாளர்) என்பதாலும், அல்காரிதம் காரணமாகவே தனது பதிவு கோலியின் இன்ஸ்டாகிராம் ஃபீடில் சென்றிருக்கலாம் எனத் தெரிவித்தார்.
AI புகைப்படங்களும், பிளாக் மிரர் (Black Mirror) வாழ்க்கையும்
இந்த சர்ச்சைக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் தன்னையும் விராட் கோலியையும் இணைத்து சில AI புகைப்படங்கள் உலா வருவதாக அவர் வேதனை தெரிவித்தார். "எனக்கு அது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், கோலிக்கு அது நல்லதல்ல. ஏனென்றால் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை," என்று அவர் கூறினார்.
இந்த விவகாரம் வைரலான அந்த முதல் நாளைப் பற்றி அவர் கூறுகையில், "ஒரு நாள் காலையில் எழுந்து பார்த்தால், என் வாழ்க்கை நெட்ஃபிக்ஸ்-ன் 'பிளாக் மிரர்' வெப் சீரிஸ் போல மாறிவிட்டது. எங்கும் என் முகமே செய்திகளாக இருந்தது. இந்தியாவில் 'யார் இந்த லிஸ்லாஸ்?' என்று தேடிக்கொண்டிருக்க, ஜெர்மனியில் உள்ள ஊடகங்கள் 'யார் இந்த விராட் கோலி?' என்று தேடி தலைப்புச் செய்திகளை வெளியிட்டன," என்று ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார்.
இந்த திடீர் புகழால் தனக்கு பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கவும், காசினோ போன்ற பிராண்டுகளை விளம்பரப்படுத்தவும் பல வாய்ப்புகள் குவிந்ததாக அவர் கூறினார். எனினும், தனது கொள்கைகளுக்கு முரணான வாய்ப்புகளைத் தான் ஏற்க மறுத்துவிட்டதாகவும், இந்த வைரல் நிகழ்வால் ஜெர்மனியில் ஒரு கிரிக்கெட் தொடரை தொகுத்து வழங்கும் நல்ல வாய்ப்பு மட்டும் கிடைத்ததாகவும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
உண்மை வென்றது: ரசிகர்கள் நிம்மதி
ஊடகத் துறையில் சிலரது டிஆர்பி மற்றும் சுயலாபத்திற்காக ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரின் நற்பெயரைக் கெடுக்க எடுக்கப்பட்ட இந்த முயற்சி கடும் கண்டனத்திற்குரியது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பணத்துக்காக ஆசைப்படாமல், உண்மையை தைரியமாக வெளிப்படுத்திய ஜெர்மன் மாடல் லிஸ்லாஸின் நேர்மையை தற்போது விராட் கோலியின் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் இது போன்ற உண்மைச் செய்திகள், மற்றும் கிரிக்கெட் உலகின் சுவாரஸ்யமான நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள செய்தித்தளம்.காம் இணையதளத்தோடு இணைந்திருங்கள்.