🔥 சேலத்தில் விஜய் ஆவேசம்: திமுக அரசை நோக்கிப் பாய்ந்த கேள்விகள்!

🔥 சேலத்தில் விஜய் ஆவேசம்: திமுக அரசை நோக்கிப் பாய்ந்த கேள்விகள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று (பிப்ரவரி 13, 2026) சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி அருகே நடைபெற்ற ஐந்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். சுமார் 5,000 நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், தனது அரசியல் பயணத்திற்கு ஆளும் திமுக அரசு கொடுத்து வரும் நெருக்கடிகளைப் பட்டியலிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினை நோக்கி நேரடியாக 4 முக்கியக் கேள்விகளை முன்வைத்தார்.

🎤 விஜய்யின் அனல் பறக்கும் கேள்விகள்:

1. "தன்னை நேசிச்ச மக்களுக்காக அரசியலுக்கு வந்தது தப்பா?" தான் சினிமா எனும் சொகுசான வாழ்க்கையை விட்டுவிட்டு, தன்னை வாழ வைத்த மக்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வந்ததைச் சுட்டிக்காட்டிய விஜய், "மக்களுக்காக உழைக்க வருவது இங்குப் பெரும் குற்றமாகப் பார்க்கப்படுகிறதே, இது தப்பா?" எனக் கேட்டார்.

2. "எல்லாத்தையும்  ஒதுக்கிட்டு மக்களுக்காக மட்டும் வந்தது தப்பா?" கோடிக்கணக்கான வருமானம், புகழின் உச்சி என அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் சேவைக்காக முழு நேர அரசியலுக்கு வந்திருப்பதைச் சுட்டிக்காட்டி தனது அர்ப்பணிப்பைக் கேள்வியாக எழுப்பினார்.

3. "மத்த காட்சிகளுக்கு அனைத்து விழா நடத்த இடம் தருகிறார்கள் எங்களுக்கு மட்டும் ஏன் கொடுக்கவும் இல்லை குடுக்க விடுரதும் இல்லை ?"
 "மற்ற அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த மைதானங்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன. ஆனால், தமிழக வெற்றிக் கழகம் ஒரு இடத்தைக் கேட்டால் மட்டும் மறுக்கப்படுவதோ அல்லது கடைசி நேரத்தில் முட்டுக்கட்டை போடப்படுவதோ ஏன்? எங்களைப் பார்த்து ஏன் இவ்வளவு பயம்?" என்று ஆவேசமாக வினவினார்.

4. SOPனா எனக்கு மட்டும் ஸ்டாலின் சார் ஒபெரடிங் ப்ரோஸ்சிரா  இது என்ன நியாயம் ?
 பொதுவாக SOP என்றால் Standard Operating Procedure (நிலையான வழிகாட்டு நெறிமுறை) என்று அர்த்தம்.எனக்கு மட்டும் Stalin Operating Procedure. மற்ற கட்சிகளின் ஊர்வலங்களுக்கும், கூட்டங்களுக்கும் இல்லாத கட்டுப்பாடுகள் தவெக-விற்கு மட்டும் ஏன்?" என நேரடியாக முதல்வரை நோக்கிக் கேள்வி எழுப்பினார்.


🛡️ 51 நிபந்தனைகள் மற்றும் இன்றைய கூட்டம்

சேலம் மாநகரக் காவல் துறை விதித்த 51 கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தக் கூட்டம் நடைபெற்றது. நுழைவுச் சீட்டு பெற்ற 4,998 நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். "எத்தனை தடைகள் போட்டாலும், மக்களின் ஆதரவுடன் அவற்றை உடைத்து 2026-ல் கோட்டையைப் பிடிப்போம்" எனத் தொண்டர்கள் மத்தியில் விஜய் சூளுரைத்தார்.

🔍 அரசியல் அலசல்

விஜய்யின் இந்த நேரடித் தாக்குதல், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையே நிலவும் நேரடிப் போட்டியை உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, அரசாங்கத்தின் SOP நடைமுறைகளை அவர் கேள்விக்குள்ளாக்கியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

தேர்தல் களம்

vote-image

காலை நேரத்தில் நீங்கள் முதலில் எந்த தகவலைப் பார்க்கிறீர்கள்?

0%
100%
0%
0%
0%

இணைந்திருங்கள்

அண்மைச் செய்திகள்

முக்கிய பிரிவுகள்

அண்மைக் கருத்துகள்

  • user by Anbu

    Very useful, pls keep on post daily

    quoto
  • user by செல்வா சிவபெருமாள்

    கூட்டுறவு நகை தள்ளுபடி பண்ண வேண்டும்

    quoto
  • user by PRASATH D

    👍

    quoto

Please Accept Cookies for Better Performance