news விரைவுச் செய்தி
clock
"வீட்டில் இருப்பேன்... மோதிப் பாருங்கள்": விஜய்க்கு ஜல்லிக்கட்டு ஜூலி பகிரங்க சவால்!

"வீட்டில் இருப்பேன்... மோதிப் பாருங்கள்": விஜய்க்கு ஜல்லிக்கட்டு ஜூலி பகிரங்க சவால்!

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் கடந்த பிப்ரவரி 23 அன்று நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஒரு 'குட்டி ஸ்டோரி' சொன்னார். அதில், மிரட்டும் ஜல்லிக்கட்டு காளையை ஒரு சிறுவன் புல்லுக்கட்டைக் காட்டி சாந்தப்படுத்தி அழைத்துச் சென்றதாகக் கூறி, அந்தச் சிறுவன் தான் 'தவெக' என உருவகப்படுத்தினார். இந்த உரையை விமர்சித்து ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி வீடியோ வெளியிட்ட நிலையில், தற்போது இருவருக்கும் இடையிலான மோதல் முற்றியுள்ளது.

ஜூலியின் விமர்சனம்

விஜய்யின் பேச்சைக் கண்டித்து ஜூலி வெளியிட்ட முதல் வீடியோவில், "ஜல்லிக்கட்டு காளைக்கு புல்லுக்கட்டு காட்டினால் அது குத்தத்தான் வரும். உங்கள் பேச்சைக் கேட்டு உங்கள் கட்சி மைனர்கள் அதேபோலச் செய்து ஆபத்தில் சிக்கினால் யார் பொறுப்பு? இதுவரை ஜல்லிக்கட்டில் 50 பேர் பலியானதை 500 ஆக்கிவிடாதீர்கள்" எனச் சாடியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

தவெக தொண்டர்கள் மிரட்டல்?

ஜூலியின் இந்த விமர்சனத்தால் கொந்தளித்த தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் ஜூலியை மிகக் கடுமையாக விமர்சித்து மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. பல போலி கணக்குகள் மூலம் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மிரட்டல் வருவதாக ஜூலி குற்றம் சாட்டியுள்ளார்.

"வீட்டில்தான் இருப்பேன்" - ஜூலி சவால்

மிரட்டல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஜூலி இன்று வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் விஜய்க்குப் பகிரங்க சவால் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: "விஜய் அண்ணா, உங்கள் ரசிகர்கள் என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் நான் பயந்து வீடியோவை நீக்க மாட்டேன். உங்களுக்கு என் மீது கோபம் இருந்தால், என்னைப் பழிவாங்க வேண்டும் என்றால் நான் என் வீட்டில் இருப்பேன் அல்லது அலுவலகத்தில் இருப்பேன். துணிச்சல் இருந்தால் என்னிடம் நேரடியாக மோதிப் பாருங்கள். பனையூர் (விஜய் அலுவலகம்) விட்டு வெளியே வரமாட்டீர்கள் போல.. நான் வேண்டுமானால் பனையூர் வரட்டுமா?" என ஆவேசமாகக் கேட்டுள்ளார்.

அரசியல் களம்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய் தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டு வரும் சூழலில், ஒரு சாதாரணப் பெண்ணின் விமர்சனத்திற்கு தவெகவினர் காட்டும் எதிர்வினை பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அடையாளப்பட்ட ஜூலி, அதே ஜல்லிக்கட்டு அரசியலை வைத்தே விஜய்யை நோக்கிச் சீறியிருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.


1. விஜய் சொன்ன ஜல்லிக்கட்டு குட்டி ஸ்டோரி என்ன? மிரட்டும் காளையை அனுபவசாலிகள் அடக்க முடியாமல் தவித்தபோது, ஒரு சிறுவன் (தவெக) புல்லுக்கட்டைக் காட்டி சாந்தப்படுத்தியதாக விஜய் கூறினார்.

2. ஜூலி ஏன் விஜய்யை விமர்சித்தார்? ஜல்லிக்கட்டு காளையின் இயல்பை விஜய் தவறாகச் சித்தரிக்கிறார் என்றும், புல்லுக்கட்டு காட்டினால் காளை சாந்தமாகாது என்றும் கூறி ஜூலி விமர்சித்தார்.

3. ஜூலி தற்போது விடுத்துள்ள சவால் என்ன? மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டேன் எனக் கூறிய ஜூலி, விஜய்யைத் தன்னை நேருக்கு நேர் சந்திக்கச் சவால் விடுத்துள்ளார்.

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

தேர்தல் களம்

vote-image

காலை நேரத்தில் நீங்கள் முதலில் எந்த தகவலைப் பார்க்கிறீர்கள்?

0%
100%
0%
0%
0%

இணைந்திருங்கள்

அண்மைச் செய்திகள்

முக்கிய பிரிவுகள்

அண்மைக் கருத்துகள்

  • user by Anbu

    Very useful, pls keep on post daily

    quoto
  • user by செல்வா சிவபெருமாள்

    கூட்டுறவு நகை தள்ளுபடி பண்ண வேண்டும்

    quoto
  • user by PRASATH D

    👍

    quoto

Please Accept Cookies for Better Performance