மாஸ்கோ டாச்சாவில் நடந்த ரகசிய அரசியல் முடிவுகள்

மாஸ்கோ டாச்சாவில் நடந்த ரகசிய அரசியல் முடிவுகள்

🌍 உலக அரசியலில் தாக்கம்

மார்ச் 1, 1953

ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மாஸ்கோவுக்கு அருகே இருந்த தன் டாச்சா (கேபினில்) தங்கி இருந்தார். கிரெம்ளினில் தங்குவதை விட, தட்சாவிற்கு நெருங்கிய தலைவர்களை வரவழைத்து ஆலோசனை நடத்துவதையே விரும்பினார். மிக முக்கியமான அரசியல் முடிவுகள் இந்த தட்சாவின் சாப்பாட்டு மேசையிலேயே எடுக்கப்பட்டன.

மகன், மகள், குடும்பம் எல்லாம் இருந்தும் இல்லாத நிலை, அதனால் தனியாக இங்கே தங்கி ரோஜா செடிகளை வளர்ப்பதிலும், எலுமிச்சை மற்றும் தர்பூசணி பயிரிடுவதிலும் நேரம் செலவிட்டார். இது அவருக்கு ஒருவித மன அமைதியைத் தந்ததாகக் கூறப்படுகிறது. அவரது தட்சாவில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொண்ட நூலகம் இருந்தது. அவர் தினமும் பல மணிநேரம் வாசிப்பதில் செலவிடுவார். மேலும், கிராமபோன் இசைத்தட்டுகள் கேட்பதிலும் அவருக்கு விருப்பம் அதிகம்.

"நண்பர்களை அருகில் வைத்துக்கொள், எதிரிகளை இன்னும் அருகில் வைத்துக்கொள்" என்பது அதிகார மையங்களிலும் போர்த்தந்திரங்களிலும் மிகவும் பிரபலமான ஒரு பழமொழி.

அதனால் ஸ்டாலின் சோவியத் அதிகார மையங்களில் தனக்கு அருகே இருந்தவர்களை அழைத்து மதுவை ஊற்றிகொடுப்பார். இரவு முழுக்க குடித்துவிட்டு திரைப்படங்களை பார்ப்பார்கள். முக்கியமாக குடித்துவிட்டு அவர்கள் என்ன உளறுகிறார்கள் என்பது கண்காணிக்கபடும்.

அன்று இரவு ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் இருந்த நால்வர் அந்த அறையில் இருந்தார்கள். ஒருவர் நிகிதா குருஷேவ், இன்னொருவர் உளவுத்துறைத் தலைவர் லாவ்ரெண்டி பெரியா.

இதற்கு சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலினின் ஒன்பது யூத மருத்துவர்கள் அவரை கொல்ல முயன்றதாக கைதாகியிருந்தனர். ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து சோவியத் தலைவர்களையும் ஒரே நாளில் கொன்று, ப்ரிட்டனின் உதவியுடன் சோவியத் யூனியனின் அதிபர் ஆக சீனியர் தலைவர் ஒருவர் முயன்று வந்ததாக வந்த தகவல் கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருந்தது. யார் அந்த கருப்பு ஆடு?

ஸ்டாலினுக்கு அடுத்து பதவி ஏற்ககூடியவ்ர் என்றால் அது பெரியா தான். ஆனால் அவர் விசுவாசி. சோவிய்த் யூனியனின் அணுகுண்டு தயாரிப்பை வெற்றிகரமாக செய்துமுடித்தவர். நிகிதா குருஷேவை ஸ்டாலினுக்கு பிடிக்காது என்றாலும் அவரை தீங்கற்றவர் என தான் கருதினார். ஒரு வேளை "இது பெரியாவின் சதியாக இருக்குமோ?"

பெரியா ரகசியமாக கண்காணிக்கப்பட்டார். ஸ்டாலினுடனான உரையாடல்களில் வித்தியாசம் தெரிந்தது. இன்னும் சில நாட்களில் தன் நிலை அதோகதி தான் என பெரியாவுக்கு தெரிந்தது. அதற்கு முன் தான் முந்திக்கொண்டால்?

அதன்பின் அன்றிரவு பெரியா மது அருந்தவில்லை, குடிப்பது போல நடித்தார். ஸ்டாலினுடன் சேர்ந்து படம் பார்த்தார். ஸ்டாலின் நல்ல மதுமயக்கத்தில் இருந்தார். குருஷேவ் உள்ளிட்ட அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். 

இந்த சூழலில் அந்த அறையில் விழிப்புடன், மது அருந்தாமல் இருந்தவர் பெரியா தான்

காலை 4 மணிக்கு அவர்கள் விடைபெறுகிறார்கள். ஸ்டாலின் எழுந்து ஒரு கோப்பை ஒயினை அருந்துகிறார். விடை கொடுக்கிறார். பெரியா புன்னகையுடன் விடைபெறுகிறார். மாலையில் அவருக்கு டாச்சாவில் இருந்து போன் வருகிறது.."ஸ்டாலின் அறையை விட்டு வெளியே வரவே இல்லை"

பெரியா டாச்சாவுக்கு விரைகிறார். டாச்சாவை தன் கட்டுபாட்டில் எடுக்கிறார். ஸ்டாலின் அறையின் தரையில் விழுந்து கிடக்கிறார். ஸ்ட்ரோக் வந்த அறிகுறிகள் உள்ளன.

"தலைவருக்கு ஒன்றும் இல்லை. தூக்கம் தான். தொந்தரவு செய்யவேண்டாம்" என சொல்லி ஸ்டாலினை தரையிலேயே விட்டுவிட்டு வெளியே வருகிறார் பெரியா. டாக்டர்களை அழைக்கவேண்டாம் என்கிறார்

மறுநாள் மிக தாமதமாக செய்தி தெரிந்து குருஷேவ் உள்ளிட்ட எல்லாரும் ஓடிவந்தபின் தான் டாக்டர்கள் வருகிறார்கள். ஸ்டாலினுக்கு விழிப்பு வருகிறது. ஆனால் மீண்டும் மயங்கிய நிலையில் மரணமடைந்து விடுகிறார்

இதன்பின் குருஷேவ் பெரியாவை கைது செய்து ப்ரிட்டிஷ் உளவாளி எனும் குற்றசாட்டை சுமத்தி அவரை கொன்றுவிடுகிறார்

அன்று இரவு சினிமா பார்த்து எல்லாரும் மயங்கிய நிலையில் பெரியா மதுவில் வார்பரின் எனும் மருந்தை கலந்ததாக பெரியாவின் எதிரிகள் சொல்கிறார்கள். வார்பரினில் எந்த சுவையும் இருக்காது, வாசமும் இருக்காது. அதை உட்கொண்டால் ஸ்ட்ரோக் வந்து மரணமடையவேண்டியதுதான்.

மரணம் தன்னை நோக்கி வருகையில் மனிதன் மிகப்பெரும் ரிஸ்க்கை எடுக்க தயாராகிவிடுகிறான். பெரியா அதைத்தான் செய்தாரா? அந்த உண்மை தெரிந்த ஒரே மனிதர் பெரியா தான்.

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

தேர்தல் களம்

vote-image

காலை நேரத்தில் நீங்கள் முதலில் எந்த தகவலைப் பார்க்கிறீர்கள்?

0%
100%
0%
0%
0%

இணைந்திருங்கள்

அண்மைச் செய்திகள்

முக்கிய பிரிவுகள்

அண்மைக் கருத்துகள்

  • user by Anbu

    Very useful, pls keep on post daily

    quoto
  • user by செல்வா சிவபெருமாள்

    கூட்டுறவு நகை தள்ளுபடி பண்ண வேண்டும்

    quoto
  • user by PRASATH D

    👍

    quoto
vote-image

காலை நேரத்தில் நீங்கள் முதலில் எந்த தகவலைப் பார்க்கிறீர்கள்?

0%
100%
0%
0%
0%

Please Accept Cookies for Better Performance