news விரைவுச் செய்தி
clock
தமிழ்நாட்டில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகமா? ஆஸ்திரேலிய UWA வருகைக்கு சிபிஎம் கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகமா? ஆஸ்திரேலிய UWA வருகைக்கு சிபிஎம் கடும் கண்டனம்!

சென்னை வேலச்சேரியில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகமா? கல்வி உரிமைக்கு ஆபத்து என சிபிஎம் கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகமாக மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (University of Western Australia - UWA) சென்னை வேலச்சேரியில் அமைய உள்ளதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது கல்வி உரிமை, சமூக நீதி மற்றும் இறையாண்மை மீதான நேரடித் தாக்குதல் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விமர்சித்துள்ளார்.

உயர்கல்வியை வியாபாரமாக்கும் செயல்

பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) இறுதி ஒப்புதலோடு, தமிழ்நாடு அரசும் இதற்கு அனுமதி அளித்துள்ளது. இது ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ன் ஒரு பகுதி என்றும், உயர்கல்வியை வணிக நலன்களுக்கு அடகு வைக்கும் இச்செயலை ஏற்க இயலாது என்றும் சிபிஎம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 2026-ல் தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டுவந்த சட்ட திருத்தத்தின் அடுத்த கட்டமாக இது அமைந்துள்ளது.

அரசு கல்லூரிகளின் அவலநிலை

ஒருபுறம் தமிழகத்தில் உள்ள 21 மாநிலப் பல்கலைக்கழகங்களில் 30 முதல் 50 சதவீத பணியிடங்கள் காலியாகவே உள்ளன. அரசு கலைக் கல்லூரிகளில் 7,198 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், அடித்தட்டு மற்றும் நடுத்தர மாணவர்களின் உயர்கல்வித் தரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அரசு சிவப்புக் கம்பளம் விரிப்பது வேதனைக்குரியது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எட்டாக்கனியாகும் கல்விக் கட்டணம்

UWA பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு கல்விக் கட்டணங்கள் சாமான்ய மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு எட்டாத தூரத்தில் உள்ளன.

  • எம்.பி.ஏ (MBA) - ரூ.23.10 லட்சம்

  • செயற்கை நுண்ணறிவு (AI) - ரூ.17.93 லட்சம்

  • வணிக மேலாண்மை - ரூ.14.52 லட்சம்

  • தரவு அறிவியல் (Data Science) - ரூ.14.52 லட்சம்

மேற்கண்டவை முதலாம் ஆண்டுக்கான கட்டணங்கள் மட்டுமே; இது தவிர பிற கட்டணங்களும் வசூலிக்கப்படும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கட்டணங்கள் மீது தலையிட ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால், இது மாபெரும் வரம்பற்ற கட்டணக் கொள்ளைக்கு வழிவகுக்கும் என சிபிஎம் எச்சரித்துள்ளது.

அனுமதியைத் திரும்பப் பெற வலியுறுத்தல்

அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கலைக் கல்லூரிகளுக்குப் போதிய அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை வழங்காமல், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை வரவேற்பது இடஒதுக்கீடு மற்றும் தேசத்தின் இறையாண்மை மீது தொடுக்கப்படும் கடும் தாக்குதலாகும். எனவே, ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

  • செய்தியாளர் அன்பழகன்

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

தேர்தல் களம்

vote-image

2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்கள் எந்த இரண்டு தொகுதிகளில் நடைபெறுகின்றன?

0%
100%
0%

இணைந்திருங்கள்

அண்மைச் செய்திகள்

Please Accept Cookies for Better Performance