news விரைவுச் செய்தி
clock
தமிழ்நாடு அரசின் “All Children in School”

தமிழ்நாடு அரசின் “All Children in School”

படிப்பை இடைநிறுத்திய குழந்தைகளை மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வரும் அரசுத் திட்டம் – ஒரு நேரடி அனுபவம்

“நீங்கள் ஆழி மழை கண்ணன் அப்பாவா?” என்ற ஒரு சாதாரண தொலைபேசி அழைப்பில் தொடங்கிய உரையாடல், கல்வி குறித்து அரசின் தீவிரமான செயல்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய தகவலாக மாறியது.

தொலைபேசியில் பேசியவர் தன்னை தமிழ்நாடு அரசின் கல்வித்துறையைச் சேர்ந்த ஸ்பெஷல் ஆஃபீசர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் அவர் பெயர் திருமதி பிரபாவதி என்பதும் தெரிய வந்தது. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர், தற்போது சென்னை மாவட்டத்தில் “All Children in School” திட்டத்தின் ஸ்பெஷல் ஆஃபீசராகப் பணியாற்றி வருகிறார்.

இந்தத் திட்டத்தின் நோக்கம் தெளிவானது – பள்ளிக்கல்வியை நடுவில் கைவிட்ட குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை மீண்டும் கல்வி நடைமுறைக்குள் கொண்டு வருவது.


“All Children in School” – தமிழ்நாடு அரசின் தீவிர முயற்சி

தமிழ்நாடு அரசின் கல்வித்துறை முன்னெடுத்து வரும் “All Children in School” திட்டம், அரசுப் பள்ளி மட்டுமல்லாது தனியார் பள்ளிகளிலும் இடைநிறுத்தப்பட்ட மாணவர்களின் தகவல்களை சேகரிக்கிறது. டிசி (Transfer Certificate) பெற்ற குழந்தைகள், தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இருப்பவர்கள் ஆகியோரின் தரவுகள் தொகுக்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்திற்கு கல்வித்துறையின் உயர் மட்ட அதிகாரிகள் வழிகாட்டுகிறார்கள். குறிப்பாக, DPI அலுவலகத்தில் ஜாயிண்ட் டைரக்டர் ஜெயக்குமார் தலைமையில் திட்டம் செயல்படுகிறது என திருமதி பிரபாவதி தெரிவித்தார்.

மாவட்ட வாரியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, பள்ளி விட்டு விலகிய குழந்தைகளை மீண்டும் கல்விக்குள் கொண்டு வருவது முக்கிய பணியாக முன்னெடுக்கப்படுகிறது.


சென்னை மாவட்டத்தில் உதவி பெறுவது எப்படி?

திருமதி பிரபாவதி தெரிவித்ததாவது:

  • சென்னை மாவட்டத்தில் யார் வேண்டுமானாலும் நேரடியாக அவரைத் தொடர்பு கொள்ளலாம்.

  • எந்த அரசுப் பள்ளியிலும் சேர்க்கை பெற உதவி செய்யப்படும்.

  • சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு சேர்க்கை உறுதி செய்யப்படும்.

  • சிங்கிள் பேரண்ட் குழந்தைகள், பொருளாதார வசதி இல்லாத குடும்பங்கள் ஆகியோருக்கு என்.ஜி.ஓ மூலம் நிதி உதவியும் ஏற்பாடு செய்யப்படும்.

  • வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்களுக்கும் உதவி கிடைக்கும்.

இதில் பள்ளிக் கல்வி மட்டும் அல்ல. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., டி-பார்ம் போன்ற டிப்ளமோ படிப்புகளிலும் அரசு கல்லூரிகளில் இடம் பெற்று படிப்பைத் தொடர உதவி வழங்கப்படும்.


கல்வி மட்டுமல்ல – மனநலம் மற்றும் வழிகாட்டலும்

இன்றைய தலைமுறையில் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் கல்வி குறைவோடு முடிவதில்லை. ஆன்லைன் கேம்கள், யூடியூப், சமூக வலைதளங்கள் போன்றவற்றில் அடிமையாகிப் போவது, பருவ வயது மனச்சிக்கல்கள் போன்ற பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன.

இந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்கும் வகையில், குழுவில் மனநல நிபுணர் (Psychiatrist) மூலம் கவுன்ஸிலிங் ஏற்பாடு செய்யப்படுகின்றது. கல்விக்குள் திரும்புவது மட்டுமல்லாமல், குழந்தைகள் மனநல ரீதியாகவும் மீள வேண்டும் என்பதே திட்டத்தின் விரிவான நோக்கம்.


சேவை மனப்பான்மை – ஒரு அதிகாரியின் அர்ப்பணிப்பு

திருமதி பிரபாவதி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். ஆனால் அவரின் பேச்சில் சோர்வு எதுவும் இல்லை. புதிதாகப் பணியில் சேர்ந்த ஒருவரின் உற்சாகம் போலவே அவர் பேசினார்.

அவரின் குரலில் இருந்து தெளிவாகப் புரிந்த ஒன்று – இது ஒரு வேலை அல்ல, ஒரு சமூகப் பொறுப்பு.

அரசு வழங்கும் மாதாந்திர ஊதியம் அவருக்கு முக்கியமல்ல. “நாம் செய்யும் பணி பலரின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வருகிறதா?” என்பதே அவரின் சிந்தனை.

பல லட்சங்கள் சம்பளம் பெற்றாலும் பெரும்பாலானோர் செய்யும் வேலை, வெறும் கடமையாகவே இருக்கும். ஆனால் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் பணியில் ஈடுபடும் போது கிடைக்கும் திருப்தி வேறு நிலை.

அவரின் பணிவும் இறைநம்பிக்கையும் உரையாடலில் வெளிப்பட்டது. இறைநம்பிக்கை கொண்ட அதிகாரி, இறைநம்பிக்கை இல்லாத ஆட்சி என்ற விவாதங்களைத் தாண்டி, மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவது – அதுவே உண்மையான நிர்வாகம் என்பதை இந்த அனுபவம் காட்டுகிறது.


ஆரம்ப விளைவு – உடனடி பதில்கள்

இந்தத் தகவல் பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே பல பெற்றோர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். ஒரு குழந்தைக்கு உடனடியாக கவுன்ஸிலிங் வழங்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இதன் முழுப் பெருமையும் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தான். தகவல் பரிமாற்றத்தின் மூலம் மக்களிடம் சேர்த்ததே ஒரு சிறிய பங்காகும்.


தொடர்பு விபரம் (சென்னை)

திருமதி பிரபாவதி
ஸ்பெஷல் ஆஃபீசர், சென்னை மாவட்டம்
மொபைல்: 98401 85198

தேவையுள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். பாராட்ட அல்லது தகவல் சேகரிப்பதற்காக தேவையற்ற அழைப்புகள் விடாமல் ஒத்துழைக்கவும்.

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

தொடர்புடைய செய்திகள்

இணைந்திருங்கள்

தேர்தல் களம்

vote-image

2026இல் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?

26%
11%
42%
15%
7%

அண்மைச் செய்திகள்

முக்கிய பிரிவுகள்

அண்மைக் கருத்துகள்

  • user by Karthik

    சிறந்த நடிகர், நடிகைகளுக்கு 1 பவுன்

    quoto
  • user by Seithithalam

    Thanks for your great support,

    quoto
  • user by Karthik

    Kaipulla is one of the best

    quoto

Please Accept Cookies for Better Performance