அதிமுக-வின் அதிரடி 'மெகா' வாக்குறுதிகள் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட முதல் 21 அம்சத் திட்டங்கள்
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரப்படுத்தியுள்ளார். திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் மக்கள் சந்திக்கும் விலைவாசி உயர்வு மற்றும் வரிச் சுமையைப் போக்க, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தப்படவுள்ள 21 மிக முக்கியமான வாக்குறுதிகளை அவர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
அதிமுக-வின் 21 அம்சத் திட்டங்கள் - ஒரு பார்வை
1. விலைவாசி உயர்வு நிவாரணம்: ₹10,000 சிறப்பு நிதி
திமுக ஆட்சியில் உயர்ந்துள்ள சொத்து வரி, மின்சாரக் கட்டணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10,000 சிறப்பு உதவித் தொகை ஒருமுறை வழங்கப்படும்.
2. மகளிர் நலன்: 'குல விளக்கு திட்டம்'
பொருளாதார சமநிலையை உருவாக்கும் நோக்கில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகையாகச் செலுத்தப்படும்.
3. ஆண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்
தற்போது பெண்களுக்கு நடைமுறையில் உள்ள நகரப் பேருந்து இலவசப் பயணத் திட்டம் தொடரும். அத்துடன், இனி ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும்.
4. அனைவருக்கும் சொந்த வீடு: 'அம்மா இல்லம் திட்டம்'
சொந்த வீடு இல்லாத ஏழைகளுக்குக் கிராமப்புறங்களில் வீட்டு மனையுடன் கூடிய கான்கிரீட் வீடுகளும், நகர்ப்புறங்களில் அடுக்குமாடி வீடுகளும் விலையில்லாமல் கட்டித் தரப்படும். இதில் பட்டியலின மக்களின் புதிய குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
5. 150 நாட்கள் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை தமிழகத்தில் 150 நாட்களாக உயர்த்திச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
6. அம்மா இருசக்கர வாகன மானியம்
வேலைக்குச் செல்லும் மகளிருக்கு ₹25,000 மானியத்துடன், 5 லட்சம் பேருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
7. ஓய்வூதியம் ₹2,000-ஆக உயர்வு
முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான மாதாந்திர ஓய்வூதியம் ₹1,200-லிருந்து ₹2,000-ஆக உயர்த்தப்படும்.
8. கல்விக்கடன் தள்ளுபடி
வேலைவாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் மாணவர்களின் நலன் கருதி, அவர்களின் கல்விக்கடனை அரசே ஏற்று முழுமையாகத் தள்ளுபடி செய்யும்.
9. ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள்
அரிசி குடும்ப அட்டைதாரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.
10. ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு & நிதி
உயிரிழக்கும் வீரர்களின் குடும்பங்களுக்கு ₹10 லட்சம் நிதியுதவி.
படுகாயமடைந்தவர்களுக்கு ₹2 லட்சம் சிகிச்சை நிதி.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு சார்பில் ₹5 லட்சம் மானியம் மற்றும் ஆன்லைன் பதிவு முறை ரத்து.
11. சிறுபான்மையின மகளிர் நலன்
இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் பிற சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்க வட்டியல்லா கடன் வழங்கப்படும்.
12. கடன்கள் தள்ளுபடி (மாற்றுத் திறனாளிகள் & வியாபாரிகள்)
மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி.
நடைபாதைச் சிறு வியாபாரிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி.
13. வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை
வேலைக்காகக் காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ₹2,000.
+2 வரை முடித்துப் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ₹1,000.
14. மீனவர் நிவாரணம் உயர்வு
மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித் தொகை ₹8,000-லிருந்து ₹12,000-ஆக உயர்த்தப்படும்.
15. பொங்கல் பரிசுடன் ₹1,000 ரொக்கம்
ஒவ்வொரு ஆண்டும் தைப் பொங்கலுக்குப் பொங்கல் தொகுப்புடன் ₹1,000 ரொக்கப்பணம் வழங்கப்படும்.
16. நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் உயர்வு
கைத்தறி நெசவாளர்களுக்கு 450 யூனிட்.
விசைத்தறி நெசவாளர்களுக்கு 1400 யூனிட்.
17.கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி.
நடைபாதை சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி.
18. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம்
சொந்த ஆட்டோ இல்லாத ஓட்டுநர்கள் புதிய ஆட்டோ வாங்க ₹75,000 மானியம் வழங்கப்படும்.
19. இலவச வேட்டி, சேலை
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு அனைத்துப் பெண்களுக்கும் தரமான சேலையும், ஆண்களுக்குத் தரமான வேட்டியும் விலையில்லாமல் வழங்கப்படும்.
20. இல்லத்தரசிகளுக்கு இலவச பிரிட்ஜ் (Fridge)
பணிச் சுமையைக் குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குளிர் பதன பெட்டி (Fridge) விலையில்லாமல் வழங்கப்படும்.
21. ரேஷனில் கூடுதல் பொருட்கள்
இலவச அரிசியுடன், மாதந்தோறும் 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் சமையல் எண்ணெய் விலையில்லாமல் வழங்கப்படும்.
சந்திப்பு மற்றும் பிரசாரத்தின் பின்னணி
எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தின் போது, "விடியா திமுக ஆட்சியில் மக்கள் படும் துயரங்களுக்கு இந்த வாக்குறுதிகள் மருந்தாக அமையும்" எனத் தெரிவித்தார். குறிப்பாகப் பெண்கள் மற்றும் ஏழை மக்களின் வாக்குகளைக் குறிவைத்து இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதிமுக-வின் அதிரடி 'மெகா' வாக்குறுதிகள் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட மத்திய மற்றம் மாநில கூட்டாட்சி செயல் படும் வாக்குறுதிகள்