news விரைவுச் செய்தி
clock
"சும்மா படிச்சா பத்தாது! இந்த 10 கேள்வியை அடிச்சு பாருங்க – TNPSC Group 2 மினி டெஸ்ட்!"

"சும்மா படிச்சா பத்தாது! இந்த 10 கேள்வியை அடிச்சு பாருங்க – TNPSC Group 2 மினி டெஸ்ட்!"

Q1. திராவிட இயக்கத்தின் "மூதாதையர்" என்று அழைக்கப்படுபவர் யார்? 

விடை. அயோத்திதாச பண்டிதர்

Note இவர்தான் 1891-லேயே "திராவிட மகாஜன சபை"யை ஆரம்பிச்சவரு. பெரியாருக்கே முன்னோடி இவருதான்.


Q2. இந்திய அரசியலமைப்பின் "இதயம் மற்றும் ஆன்மா" (Heart and Soul) என்று டாக்டர் அம்பேத்கர் எந்த விதியைக் கூறினார்? 

விடை . விதி 32 (Article 32)

Explanation: இதுதான் "அரசியலமைப்புக்குத் தீர்வு காணும் உரிமை". உங்க அடிப்படை உரிமை (Fundamental Rights) பாதிக்கப்பட்டா, நீங்க நேரா சுப்ரீம் கோர்ட்டுக்கே போகலாம்.


Q3. தமிழகத்தில் "கீழடி" அகழ்வாராய்ச்சி (Keeladi Excavation) எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

விடை. சிவகங்கை

Mistake Alert: நிறைய பேர் மதுரைனு டிக் பண்ணிருவீங்க. அது மதுரை பக்கத்துல இருந்தாலும், மாவட்டம் சிவகங்கை (திருப்புவனம் தாலுகா). 


Q4. "நீதிக்கட்சி" (Justice Party) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? 

விடை . 1916

Flashback: டி.எம்.நாயர், பி.டி.தியாகராயர், நடேசனார் இவங்க எல்லாம் சேர்ந்து ஆரம்பிச்சதுதான் இது. இவங்கதான் பின்னாடி திராவிடர் கழகமா மாறுனாங்க.


Q5. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் மற்றும் தமிழக சட்டமேலவையின் முதல் பெண் உறுப்பினர் யார்?

விடை . டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி

Extra Info: தேவதாசி ஒழிப்பு முறைக்காக போராடுன இரும்பு மனுஷி இவங்கதான். அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் (Adyar Cancer Institute) இவங்க ஆரம்பிச்சதுதான்.


Q6. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் "சதுப்பு நிலக் காடுகள்" (Mangrove Forests) எங்கு உள்ளது? 


விடை . பிச்சாவரம் (கடலூர் மாவட்டம்)

Fact: இதுதான் உலகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய சதுப்பு நிலக்காடு (World's 2nd Largest). ஃபர்ஸ்ட் எதுனு தெரியுமா? மேற்கு வங்காளத்துல இருக்கிற சுந்தரவனக் காடுகள் (Sundarbans).


Q7. ஜி.எஸ்.டி (GST) வரி எத்தனையாவது சட்டத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது? 

விடை . 101 வது சட்டத் திருத்தம் (101st Amendment Act)

Shortcut: 101 மொய் வைக்கிற மாதிரி ஞாபகம் வச்சுக்கோங்க. "GST - 101". மறக்காது!


Q8. திருக்குறளில் "பொருட்பால்" (Wealth) எத்தனை அதிகாரங்களைக் கொண்டது? 

விடை. 70 அதிகாரங்கள்

Breakup: அறம் - 38, பொருள் - 70, இன்பம் - 25. மொத்தம் 133. இத மாத்தி போட்டு கன்ப்யூஸ் ஆகிடாதீங்க!


Q9. மனித ரத்தத்தில் "உலகளாவிய கொடையாளி" (Universal Donor) என்று அழைக்கப்படும் ரத்த வகை எது? 

விடை . O Negative

Note: O Group யாருக்கு வேணாலும் ரத்தம் கொடுக்கலாம். ஆனா அதுலயும் குறிப்பா "O Negative" தான் உண்மையான Universal Donor. AB Positive உள்ளவங்க யாருக்கிட்ட இருந்து வேணாலும் வாங்கிக்கலாம் (Universal Recipient).


Q10. தமிழ்நாட்டின் "மாநில விலங்கு" (State Animal) எது? (General GK)

A) புலி B) வரையாடு (Nilgiri Tahr) C) யானை D) மான்

விடை . வரையாடு (Nilgiri Tahr)

Info: இது மேற்குத் தொடர்ச்சி மலையில் (Western Ghats) மட்டுமே காணப்படுற ஒரு அரிய வகை ஆடு. 


Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

இணைந்திருங்கள்

தேர்தல் களம்

vote-image

2026இல் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?

40%
13%
19%
17%
12%

முக்கிய பிரிவுகள்

அண்மைக் கருத்துகள்

  • user by Suresh1

    நன்றி , தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் , உங்கள் நண்பர்களுக்கும் ,உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

    quoto
  • user by குமார்

    Super

    quoto
  • user by Suresh1

    தகவல் மாற்றப்பட்டது உங்கள் கருத்துக்கு நன்றி , தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

    quoto

Please Accept Cookies for Better Performance